2025 ஆம் ஆண்டுக்கான அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாவிற்கு மிகையாகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் எஸ்.அலோக பண்டார விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.