மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய கல்லாறு எனும் கிராமத்தில் இயங்கும் விடிவெள்ளி சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.
இந்நிகழ்வு விடிவெள்ளி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திரு மேவின் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலைய கல்விப் பணிப்பாளர் திரு சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு சாஜித் அவர்களும் கலந்து கொண்டார் .
அத்துடன் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு ஜீவிதன் அவர்கள் கூட்டுறவு அபிவிரித்தி உத்தியோகஸ்தர் திரு சுரேஸ் அவர்களும் மேலும் மீட்சி அமைப்பின் வரதன் ஐயா அவர்களும் கலந்து சிறப்பித்தார் அத்துடன் விடிவெள்ளி நிர்வாக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .
துறை நீலாவனை பெரிய கல்லாறு மகிழூர் முனை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 5000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உணவுப் பொதிகளை வழங்க அனுசரனை வழங்கிய வர்கள் நெதர்லாந்து மனிதநேய செயல்பாடுகளுக்கான கூட்டுறவு சங்கம் மற்றும் சுவீட்சலாந்தைச் சேர்ந்த தண்ணீர் அமைப்பும் இணைந்து இவ் உதவி திட்டத்தினை செயல்படுத்த ஆதரவு வழங்கினர் மேலும் நெதர்லாந்து மனிதநேய கூட்டுறவு சங்கம் சுவிட்சர்லாந்து தண்ணீர் அமைப்பு இப்பிராந்தியத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுக்க உள்ளனர் இது மகிழூர் முனை கிராம மக்களுக்கு கிடைத்த வர பிரசாதமாகும்