மட்டக்களப்பு - வடமுனை கிராமத்தினுள் ஊடுருவிய காட்டுயானை வீடொன்றை தாக்கி சேதமாக்கி உள்ளது .

 


மட்டக்களப்பு - பொலன்னறுவை எல்லைக்கிராமான வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது வீடு பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளதாகவும், கணவன், மனைவி வீட்டினுள் இருந்ததாகவும் உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை  எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராமத்தினுள் இரவு 11 மணிக்கு ஊடுருவிய காட்டுயானை குறித்த வீட்டை தாக்கியுள்ளது.

இதன்போது வீட்டின் ஒருபகுதி சுவர் இடிந்து வீழ்ந்ததையடுத்து நித்திரையில் இருந்த கணவன் மனைவி ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த வெள்ள அனர்தத்தினால் மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிந்த  நிலையில் காட்டுயானை ஊருக்குள் புகுந்துள்ளதுடன் குறித்த கிராமத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்கள் யானைகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.