(கல்லடி செய்தியாளர் & செய்தி ஆசிரியர் )
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.முரளீஸ்வரனின் தலைமையில் சர்வதேச விழிப்புணர்வுப் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை (01) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இவ்விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து ஆரம்பமாகி,பஸ்தரிப்பு நிலையம்,மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக திருமலை வீதியை அடைந்து,மீண்டும் அங்கிருந்து பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் காரியாலயத்தை அடைந்ததும் நிறைவு பெற்றது.
இவ்விழிப்புணர்வுப் பேரணியில் பிராந்திய பணிப்பாளர் காரியாலய வைத்தியர்கள்,ஊழியர்கள்,மட்டக்களப்பு போதனா வைத்தியர்கள்,தாதியர்கள்,மட்டக்களப்பு தாதியர் பயிற்சிப் பாடசாலை மாணவர்கள்,தனியார் தாதியர்கள்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பணிப்பாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் பணிப்பாளர் எம்.முரளீஸ்வரன் தலைமையில் விழிப்புணர்வு கருத்துப் பரிமாறல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.