பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார்
தற்போதைக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.
முன்னைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் குறித்த கொடுப்பனவு 7 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பத்தாயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தேசித்துள்ளார்.
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவர் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.