சிமிர்னா திருச்சபையின்
சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சின்ன
ஊறணி, சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, நாவற்கேணி, சுவிஸ்
கிராமம், கிராய்மடு, அமிர்தகழி மட்டிக்களி, கருவேப்பங்கேணி ஆகிய கிராம
உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்கான சிறுவர்களின்
குடும்பங்களுக்கு சுமார் 10 ஆயிரம் பெறுமதியான உலர் உணவு பொதி வழங்கி
வைக்கப்பட்டது.
சிமிர்னா திருச்சபையின் தலைவரும் சிறுவர்
அபிவிருத்தி திட்டத்தின் இயக்குணருமான அருட்பணி எஸ்.வசந்தகுமார்
அவர்களின் தலைமையில், அதன் திட்ட முகாமையாளர் செல்வி.அமலதாஸ் கேமினி
அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பயனாளிகளுக்கான
வெள்ள நிவாரணமாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்த நிகழ்விற்கு பிரதம
அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்த
நிகழ்வில் கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திராய்மடு பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர், சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்ட நிர்வாக
குழு உறுப்பினர்கள்,
சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்ட உத்தியோகத்தர்கள், பயனாளிகள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.