நேற்று இரவு விபத்துக்கு உள்ளான  மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

 


 மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (21) திகதி இரவு வேளையில் மாமாங்கம் பிரதான வீதியில் விபத்துக்குள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இருப்பினும் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த 26 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.