சீறற்ற காலநிலை காரணமாக கல்வி அமைச்சினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி பொது தராதர பரிட்சை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது

 

 


 



 வரதன்

 

 

 

கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீறற்ற காலநிலை காரணமாக கல்வி அமைச்சினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி பொது தராதர  பரிட்சை இன்று  மட்டக்களப்பு மாவட்டத்தில்  அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது
கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீறற்ற காலநிலை காரணமாக கல்வி அமைச்சினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி பொது தராதர  பரிட்சை இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி வளையங்களிலும் அமைக்கப்பட்டு இருந்த பரீட்சை நிலையங்களில் மிக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது


 கல்வி அமைச்சினால் மீள் புதுப்பிக்கப்பட்ட நேர  அட்டவணைக்கேற்ப பரிட்சைகள் இன்று காலை இடம் பெற்றது

 மாவட்டத்தில் நிலவும் சீரான காலநிலை மத்தியில் மாணவர்கள் உற்சாகமாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தந்ததை காணக் கூடியதாக இருந்தது
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 7221  பாடசாலை பரிச்சாதிகள் - தனியார் 2361  தோற்ற உள்ளத்துடன்  69 மாவட்டத்தில் பரீட்சை நிலையங்களும்  8 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 9583  பேர் பரிட்சைக்கு தோற்றுகின்றனர்
இதேவேளை  
 மாவட்டத்தில்  பட்டிருப்பு மற்றும்  கல்குடா கல்வி வளையம் ஆகிய  இம்முறை பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது