சிடாஸ் அமைப்பினால் மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு “குழந்தை மொழி”எனும் நூல் வழங்கி வைப்பு.

 
















































FREELANCER

 

 

சிடாஸ் கனடா - மட்டக்களப்பு அமைப்பினால் மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு “குழந்தை மொழி” எனும் நூல் வழங்கும் அங்குரார்ப்பன வைபவம் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரகுமார் அவர்களின் தலைமையில் 2024.12.27 இன்று காலை 9.00 மணியளவில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார் மேலும் இந்நிகழ்வில் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் உறுப்பினர்களான திரு.முத்துராஜா புவிராஜா மற்றும் கந்தையா ரவிச்சந்திரன்

ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தகங்களையும் அவர்கள் வழங்கி வைத்திருந்தனர். இதன்போது நூற்றுக்கும் அதிகமான முன்பள்ளி ஆசிரியர்கள் இவ் நூல்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.