2023ஆம் ஆண்டுக்கான கிழக்குமாகாணத்தின் உயரிய விருதான "வித்தகர் விருது" மட்டக்களப்பு ஆரையம்பதியைச்சேர்ந்த கலாபூஷணம் இராசையா கிருஷ்ண பிள்ளை (ச.நீ) அவர்கள் பல்துறைக்கு ஆற்றிவரும் பங்களிப்பிற்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்” பல்துறை சார்ந்து ஆற்றிவரும் சேவைக்காக குறித்த "வித்தகர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பிஸ்.ரத்நாயக்க கிழக்கு மாகாண ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களான, எச்.இ.எம்.டப்ளியு, ஜி.திசாநாயக்க, மதன்நாயக்க எம்.கோபாலரெத்தினம், எம்.நசீர், குணநாதன் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கலாபூஷணம் இராசையா கிருஷ்ண பிள்ளை பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சபையோர் மத்தியில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.