மாகாண சபை முறைமை தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - இரா. சாணக்கியன்

 


மாகாண சபை முறைமை தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், இரா. சாணக்கியன் இன்று நாடாளுமன்றத்தில் பேசும்போதே இதனை கோரினார்.

ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாக குறிப்பிட்டிருந்த விடயத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.