தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும்

 


 

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவும், அது மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து டிசம்பர் 11-ம் திகதி இலங்கை – தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 75ல் சில கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.