வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் முகமாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் புகை விசிறல் இடம்பெற்றது.








 வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான  வைத்தியர் திருமதி.பாமினி அச்சுதன் தலைமையின் கீழ் சுகாதார பிரிவில் புகை விசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்  டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் முகமாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் புகை விசிறல் இடம்பெற்றது.

வைத்தியர் திருமதி.பாமினி அச்சுதன் ஆலோசனையின் கீழ் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார வெளிகள உத்தியோகத்தர்,  தெளிகருவி இயக்குனர்கள்  டெங்கு கள பணியாளர்கள் பங்கு கொண்டு புகை விசிறல் இடம்பெற்றது.