மட்டக்களப்பில் இயங்கிவரும் ஜ.டி.எம் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் (IDM EASTERN CAMPUS ) 6 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 'மனித உயிர் அரியது அதைக் காக்கும் இரத்தம் பெரியது இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தத்தை தானமா வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு பயினிர் வீதியிலுள்ள பல்கலைக்கழக கட்டிடத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் தே.சசிகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் அங்கு கல்வி கற்றும் மாணவர்கள் மற்றும் ஜ.டி.எம். ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்தத்தை தானமாக வழங்கி வைத்தனர்.