இலங்கை விமானப்படையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது

 






இலங்கை விமானப்படையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் சமைத்த உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சவாலான சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளான சேத்துக்குடா, வீச்சிக்கல்முனை மற்றும் கன்னங்குடா ஆகிய பகுதிகளில்  1000 சமைத்த உணவுப் பொதிகள் (இரவு உணவு) வழங்கப்பட்டது

அத்தோடு கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னங்குடா பகுதியில் உள்ள பெண்களுக்காக 180 சானிட்டரி பேக்குகள் (சோப்பு, டூத் பேஸ்ட், டூத் பிரஷ், சானிட்டரி பேட்கள்)  விநியோகிக்கப்பட்டதுடன்,  உலர் உணவு பொதிகளும்   (பால் பவுடர், தேயிலை, சர்க்கரை, பிஸ்கட், சமபோசா, நூடுல்ஸ், ஜெல்லி, பனடோல்) கன்னங்குடா பகுதியில் உள்ள 160 குடும்பங்களுக்கும்,  விநியோகிக்கப்பட்டது.

உலர் உணவுகள் மற்றும் சுகாதாரப் பொதிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நன்கொடையாளர்களான ஸ்ரீலங்கா அறக்கட்டளை மற்றும் வண. கட்டானே தம்மரக்கித தேரோ ஆகியோரின் ஆதரவின் மூலம் சாத்தியமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.