ஆர்ப்பாட்டத்தில் கூரிய ஆயதத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டனரா ?

 


பத்தரமுல்ல, இசுறுபாய முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

இந்த காயங்கள் இராணுவ புலனாய்வு அதிகாரியினால் ஏற்படுத்தப்பட்டமைக்கான எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்த போதிலும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகிய அதிகாரி இவ்வாறு தெரிவித்தாரா என்பது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் நியமனம் கோரி கடந்த 2ஆம் திகதி கல்வியமைச்சுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கூரிய ஆயதத்தினால் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களை காயப்படுத்தியவர் இராணுவ புலனாய்வு அதிகாரி என தலங்கம பொலிஸார் கடுவெல நீதவான் நீதிமன்றில் அறிவித்ததாக ஊடகங்களில் வௌியாகும் செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் குறித்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.