கிளிநொச்சி ஏ- 9 வீதியில் வைத்து ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர்.
அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருக்கையில், கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாதவர்கள் தன்னை தாக்கி வேனுக்குள் ஏற்றி கடத்த முயன்றதாகவும் தான் அங்கிருந்து தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கடும் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் தமிழ்ச் செல்வன், பொலிஸில்முறைப்பாடளிந்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.