ஒத்திகை நிகழ்வை உண்மை என்று நம்பிய மட்டக்களப்பு மக்கள் .

 




 

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்திற்கு முன்பாக இன்று (03) திகதி

சுகாதார துறை சார்ந்த விழிப்புணர்வு ஒத்திகைப் பயிற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

அந்த பாதையால் பயணித்த மக்கள் ஒத்திகை என்று அறிந்து கொள்ளாமல் விபத்து என்று நம்பியதுடன் சிலர் இறந்து விட்டதாக நம்பியதாகவும் தெரிகிறது .

செய்தி காட்டு தீயாக நகரமெங்கும் பரவியது

பரபரப்படைந்த மக்கள் இந்துக் கல்லூரி மைதானத்திற்கு முன்பாக கூடியிருந்தனர் .அங்கு நின்ற போக்கு வரத்து பொலிஸார் உண்மை நிலமையை பொது மக்களுக்கு எடுத்துரைத்த பின்னர் மக்கள் நிம்மதி பெரு முச்சுடன் கலைந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .