மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வெள்ள தடுப்பு செயற்திட்ட முன்னாயத்த கலந்துரையாடல்.

 

 


வரதன்


 

 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது சம்பந்தமான செயல்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது


 கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அரசாங்கத்தினால் எதிர்வரும் காலங்களில் பொதுமக்களையும்   மற்றும் விவசாய நிலங்களை அந்த வெள்ள நிவாரண பாதிப்பிலிருந்து பாதுகாப்பது சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மட்டக்களப்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்  பிரதி பணிப்பாளர்  C.M சியாத் தலைமையில் இடம் பெற்றது


இதேவேளை மாவட்டத்தில் உன்னிச்சை ரூகம் முந்தினையாறு ஆகிய குளங்களிலிருந்து வெளியாகிய அதிக நீரினால் மாவட்டத்தில் இம்முறை அதிகமான பாதிப்புகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது

 இருவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஒன்று ஏற்பட்டால் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராயும் முகமாக இந்த விசேட கலந்துரையாடல் முக்கிய திணைக்களின் பங்குபெற்றுதலுடன் இன்று இடம்பெற்றது
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலின் போது கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரை யாளர் கே கிருபை ராஜா அண்மையில் ஏற்பட்ட மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் தொடர்பான பாதிப்க்கள் பற்றிய விளக்க உரையை வழங்கி வைத்ததுடன் திணைக்கள உயர் அதிகாரிகளால் எதிர்காலத்தில் எடுக்கப்பட உள்ள அனைத்து முன்னணாயத்தை நடவடிக்கை சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிர்கால திட்டங்கள் தொடர்பான விளக்க உரைகளும் இங்கே வழங்கி வைக்கப்பட்டது


இன்றைய இந்த கலந்துரையாடலுக்கு மாவட்ட  அரசாங்க அதிபர்  திருமதி ஜேஜே முரளிதரன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் விவசாயத் திணைக்களம் மற்றும் மாவட்ட திட்டமிடல் பிரிவு முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உயர் அதிகாரிகள் மத்திய மாகாண நிர்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

எதிர்காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெற்றால் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அதனை முன்கூட்டியே அறியத் தருவது சம்பந்தமாகவும் அதிக மழை வீழ்ச்சி பதியக்கூடிய இடங்களை முன்கூட்டியே அறிந்து மக்களை இடம்பெயர்தல்

வெள்ள நீர் வழிந்தோட கூடிய இடங்களை அடையாளப்படுத்தி அவற்றை விரைவாக வாவிக்கு கடலுக்கு கொண்டு செல்லுதல் சம்பந்தமாகவும் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவது சம்பந்தமாகவும்


 வெள்ளம் வருமுன் எடுக்க வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் மற்றும் வெள்ளப்பெருக்கின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான எதிர்கால திட்டங்கள் தொடர்பான  கலந்துரையாடல் இடம்பெற்றது