மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு முருக்கன்தீவு பகுதியில் இடம் பெற்றது.
அந்த வகையில் முருக்கன்தீவு பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு லண்டன் விம்பில்டன் கணபதி ஆலயத்தின் தலைவர் வைத்தியர் மகேஸ்வரன் அவர்களின் நிதி உதவி மூலமும், கனடா மொன்றியல் திருமுருகன் ஆலயத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியின் மூலமும் தலா ஒரு குடும்பத்திற்கு இரண்டு பாய் மற்றும் இரண்டு போர்வை விரிப்பும் மற்றும் கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 200 கிராம் பால்மா பக்கற் உதவி மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு ஒரு பால்மா பக்கற் வீதம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் கிராம அதிகாரி கா.முருகானந்தன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கோறளைப்பற்று பிரதேச இணைப்பாளர் ந.குகதர்சன், பேரவையின் உறுப்பினர்களான பூ.கிரிதரன், எஸ்.சுதன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.