மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு  இடம் பெற்றது.

 

 

 


 

 





மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.

 அந்த வகையில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு  இடம் பெற்றது.

அந்த வகையில்  வெல்லாவெளி, மண்டூர்  பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் இரண்டு இலட்சம் நிதி உதவி மூலம் நூறு குடும்பத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.  

 மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் ந.புவனசுந்தரம் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.