மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை. தேர்தலை நடத்தி மாகாண அரசியல் தலைமைத்துவத்தை உரிய தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்தியா, சீனா உட்பட அனைத்து நாடுகளுடன் இணக்கமாக செயற்படுவோம். ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடுள்ளார்.