ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் இடம்பெற்றது.

 





















ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் வகையில் இந்த மௌன அஞ்சலி மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் இடம்பெற்றதுடன், இதனை நாவலடி சுனாமி நினைவு பணி மன்ற குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


ஆழிப்பேரலை இடம்பெற்று 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஆழிப்பேரலையில் உயர்நீத்த உறவுகளுக்கான தங்களது உறவுகள் ஈகை தீபச்சுடரினை ஏற்றியும் மௌன அஞ்சலியை செலுத்தினர்.

மேலும் நாவலடி கடற்கரையில் இந்து சமய குருக்களால் உயர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய சமய கிரிகைகளும் இடம் பெற்றன .

இதில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா.சானக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் ஸ்ரீநாத், மற்றும் அருண் தம்பி முத்து மற்றும் ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவுகளும் கலந்து கொண்டனர் .