வரதன்
மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு
சுனாமி அர்த்தம் ஏற்பட்டு இருபது வருட நினைவு தின நிகழ்வு இன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நினைவு கூறப்பட்டது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலக தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு புதிய மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எம். சியஆத் தலைமையில் இடம்பெற்றது
இதன் முதல் நிகழ்வாக மாவட்ட அரசாங்க அதிபர் தேசியக்கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டதன் பின்பு ஈகைச் சுடர் ஏற்றி உயிரிழந்த உறவுகளுக்காக ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
பின்னர் சுனாமி அனர்த்தம் சம்பந்தமான மும்மத தலைவர்களின் ஆத்ம சாந்தி நினைவு பேருரைகளும் இங்கு இடம் பெற்றது சுனாமி தின நினைவு அனர்த்த முற்பாதுகாப்பு உரைகள் இங்கு நிகழ்த்தப்பட்டது
கிழக்கு மாகாணத்தில் இந்த சுனாமி அனர்த்தத்தினால் அதிகளவிலான உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டது மட்டக்களப்பு மாவட்டம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
இன்றைய இந்த நினைவு தின நிகழ்வுக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் - உதவி மாவட்ட செயலாளர் எஸ் பிரணவன் மற்றும் மும்மத தலைவர்கள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.