கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்?

 


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால், பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பரீட்சை முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக, பரீட்சை சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கை இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கட்சி மாறியதாலும், சிலர் வெளிநாடு சென்றுள்ளதாலும், மேலும் சிலர் அரசியலில் இருந்து விலகியதாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.