மட்டக்களப்பு திக்கோடை மற்றும் பூச்சிக்கூடு ராணமடு பிரதேசதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கிவைக்கப்பட்டது.











 


















மட்டக்களப்பு #Dreamspace academy -யின் பூரண நிதிப்பங்களிப்பில்

சமகால மழை மற்றும் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு - போரதீவுப் பற்று திக்கோடை மற்றும் பூச்சிக்கூடு ராணமடு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கிராமத்தில் உள்ள 45 குடும்பங்களுக்கு, மட்டக்களப்பில் இயங்கும் தன்னார்வ தொண்டர் நிறுவனமான ஹெல்ப் எவர் பவுன்டேஷன் ஒழுங்கு படுத்தலில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

உலர் உணவு விநியோகத்தின் போது பிரதேசத்தை சேர்ந்த கிராம சேவையாளர்களும் இதை பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது