மட்டக்களப்பு தொழிலதிபர் தேசபந்து மா.செல்வராசா அவர்களின் மனித நேய செயற்பாடு..

https://www.youtube.com/watch?v=k0lxVvRcvb0https://youtu.be/k0lxVvRcvb0?si=JY_Q6DDhyPUfPg3Lhttps://youtu.be/k0lxVvRcvb0?si=JY_Q6DDhyPUfPg3L

 



மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலையான மெதடிஸ்த மத்திய மிஷன் உயர் தர பாடசாலையில் இன்று 22.12.2024 திகதி இடம் பெற்ற பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்விலேயே தொழிலதிபர் தேசபந்து மா.செல்வராசா மூன்றரை மில்லியனுக்கும் அதிகமான தொகையினை 10 மாணவர்களுக்கான உதவித் தொகையாக வழங்கியுள்ளார்.
பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்காக நான்கு வருடத்திற்கான உதவித் தொகையாக மாதாந்தம் தலா 7000/= ரூபாய் வீதம் நான்கு வருடங்களுக்கு 3,360,000/= ரூபாயினையும், அதற்கு மேலதிக பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ள 14 மாணவர்களுக்கு அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும்போது தமக்கு தேவையான ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக 5000/= பொறுமதியான வவுச்சர்களையும் வழங்கி வைத்துள்ளார்.