மட்டக்களப்பு கல்முனை வீதி கல்லடி உப்போடை பிரதான சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கைப் பொருத்துக..
பிரதேச வாழ் பொதுமக்களும் , பாடசாலை சமூகமும் , சமூக நலம் விரும்பிகளும் சம்பந்தப்பட்டோரிடம் கோரிக்கை!
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை , விவேகானந்தா மகளிர் கல்லூரி , இராம கிருஷ்ண மிஷன் , சாரதா பாலர் பாடசாலை , சிவானந்தா பாடசாலை விடுதி , விளையாட்டு மைதானம் , பொது வாசிக சாலை , பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அலுவலகம் , மணி மண்டபம் , துளசி கலாசார மண்டபம் , பேச்சி அம்மன் ஆலயம் , சித்தி விநாயகர் ஆலயம் , தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை
போன்ற 13 முக்கிய இடங்களுக்கு கடந்து செல்வதற்கான பிரதான நாற்சந்தியாக இருக்கிறது .
இந்த சந்தியின் ஊடாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களும் , பாதசாரிகளும், வாகனங்களும் நாளாந்தம் பயணத்தினை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் சிவானந்தா பாடசாலை மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகள் நிறைவடையும் போது நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகின்றது. ஆபத்தான கடவை என்று கூட சொல்லலாம் .
இதன்போது அச்சத்துடனேயே மாணவர்கள் பாதையைக் கடக்க வேண்டியுள்ளது . இந்தச் சந்தியில் கடந்த காலங்களில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றது .
இந்நிலைமையினைக் கருத்திற் கொண்டு பாடசாலைக்கு முன்பாக உள்ள சந்தியில் சமிக்ஞை விளக்கைப் பொருத்துவது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இது விடயத்தில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை கருத்தில் கொண்டு சமிக்ஞை விளக்கைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச வாழ் மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.