வெள்ளத்தினால் கரைஒதுங்கிய பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தின்களை அகற்றுவதற்கான சிரமதானப் பணியொன்று மட்டக்களப்பு மாநகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது .


 

















வரதன்

 

 

 

இளைஞர் விவகார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மையாக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் நிலவிய சீறற்ற காலநிலை பாதிக்கப்பட்ட இடங்களை தூய்மையாக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றது இதேவேளை இளைஞர் விவகார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தின் பிரதான வாவிகளை சுத்தப்படுத்தும் பணிகள் தேசிய இளைஞர் கள் சேவைகள் மன்றம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மோளனம் இணைந்து வெள்ளத்தினால் கரையோதிங்கிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் சிரமமான வேலை திட்டம் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எமது சூழலை நாம் பாதுகாப்போம் பொலித்தீனற்ற மாநகரத்தை சுத்தப்படுத்தும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது

கடந்த வெள்ள அடர்த்தத்தின் போது பெருமளவு பொலித்தீன் பிளாஸ்டிக்குகள் கரை ஒதுங்கிய காரணத்தினால் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை சூழலை பாதுகாப்போம் என்னும் வேலை திட்டத்தின் கீழ் நோயற்ற வாழ்வை முன்னெடுக்கும் முகமாக இந்தத் தூய்மைப் படுத்தும் பணி இன்று மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மோளனம் தலைவர் எஸ் சஜிவ் தலைமையில் மட்டக்களப்பு வாவிக்கரை பூங்காவில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டது

இப்போது வெள்ளத்தினால் கரை ஒதுங்கிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாவிஓரங்களில் இருந்து அகற்றப்பட்டதுடன் இதேவேளை இந்த சிரமதான பணிகள் மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ளது

மாவட்ட இளைஞர் சேவை உத்தியோஸ்த்தர் மா. சசிகுமார் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருண்மொழி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோத்தர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மாவட்ட இளைஞர்களின் கழக சம்மோளன பிரதிநிதிகள் இந்த சிரமதான வேலை திட்டத்தில் கலந்து கொண்டனர்

இச் சிரமதானப் பணியானது மட்டக்களப்பு வாவிக்கரை பூங்காவில் ஆரம்பித்து மட்டக்களப்பு புதுப்பால சந்தி முதல் கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம் வரை மேற்கொள்ளப்பட்டது இதன்போது வெள்ளத்தினால் கரையொதுங்கிய பெருமளவான பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது