FREELANCER
கடந்த 07.12.2024 மற்றும் 08.12.2024 திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி GREEN GARDEN விடுதியில் மேற் குறிப்பிட்ட பயிட்சிப் பட்டறை இடம் பெற்றது .
AU-LANKA திட்ட முகாமையாளர் G . Aசுரேஷ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். பிரதி பணிப்பாளர் திட்டமிடல் (மட் /மேற்கு) T .C சஞ்ஜீவன் மற்றும்
முன்பள்ளி சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி (மட் மேற்கு)உதவிப்பணிப்பாளர் (DRR FOCAL POINT ) S. கணேஷ் ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர்
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.S.M சியாத் வளவாளராக பங்கேற்றிருந்தார் ,
நிகழ்வுக்கு திட்ட இணைப்பாளர் (AU LANKA ) ஜெகன் ராஜரெட்ணம் அவர்களின் ஒழுங்கமைப்பில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது .
நிகழ்வுக்கு 31 பாடசாலைகளில் இருந்து 35 ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்
பயிட்சி பட்டறையில் கலந்துரையாடப்பட்ட சமகால மற்றும் பயனுள்ள விடயங்கள் 673 ஆசிரியர்கள் மூலமாக 9542 மாணவர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது அவசர கால உதவித்திட்டத்தின் கீழ் கிரான் மற்றும் மண்முனை (மேற்கு-வடக்கு ) சுகாதார சேவைதிணைக்களங்கள் ஊடாக படுக்கை விரிப்பு ,பாய், சிறுவருக்கான PUMPERS போன்ற அவசர உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சகல விதமான நிவாரண மற்றும் உதவி திட்டங்கள் அனைத்துக்கும் CHILDFUND SRILANKA நிறுவனம் நிதி அனுசரணை வழங்குவது குறிப்பிடத்தக்கது
A.U LANKA நிறுவகம் பல்வேறு சிறந்த நோக்கங்களோடு ,சேவை மனப்பாங்கோடு இயங்கி வருகிறது
சுகாதாரம் , கல்வி, இளைஞர் அபிவிருத்தி , அனர்த்த முகாமைத்துவம் , சிறுவர் பாதுகாப்பு , காலநிலை மாற்றத்திக்கு ஈடு கொடுக்கும் திட்டம், வாழ்வாதாரம் ,பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு, கிராமமட்ட அபிவிருத்தியுடன் கூடிய உள்வாங்கல் போன்ற உயரிய சிந்தனைகளோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வருவது குறிப்பிட்ட தக்க விடயமாகும் .