மட்டக்களப்பு சீயோன் தேவாலய கிறிஸ்மஸ் தின ஆராதனை நிகழ்வு.



 


 



வரதன்



கிறிஸ்தவ மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடும். இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும். கிறிஸ்மஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு. நாடெங்கும் தேவாலயங்களில் ஆராதனைகள்  இடம் பெற்று வருகின்றன இம்முறை  கிறிஸ்மஸ்  ஆராதனைகள்  வெகு விமர்சையாக.  கொண்டாடப்பட்டன. இதேவேளை.

மட்டக்களப்பு  பிள்ளளையாரடி சீயோன்  தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் இன்று இடம்பெற்றது.  இயேசு பாலகனின் பிறப்பை  பற்றிய பாடல்கள் பாடி இங்கு ஆராதனைகள்  நடைபெற்றன.

கிறிஸ்மஸ் தின கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு. கிறிஸ்தவ மாணவர்களுக்கு இயேசு பாலகனின் பிறப்பின் மகத்துவம் பற்றிய ஆசி உரைகளும். பிரதான போதகரால் வழங்கப்பட்டது.இந்த கிறிஸ்துமஸ் தின ஆராதனையில் பெருமளவிலான. கிறிஸ்தவ பெருமக்கள். கலந்து கொண்டனர்.