மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை BRIGHT-BEGINING- முன்பள்ளி பாடசாலையின் பட்டமளிப்பு , சான்றிதழ் வழங்கும் நிகழ்வு .


 













































FREELANCER

 

 

 

 

மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை BRIGHT-BEGINING- முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு , சான்றிதழ் வழங்கும் நிகழ்வு YMCA- மண்டபத்தில் இடம் பெற்றது .

இறைவணக்கம் , வரவேற்புரை , வரவேற்பு பாடல் என்பனவற்றைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் ஆகியன இடம்பெற்றன.


நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார  வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவர்களும் , விசேட அதிதியாக ஆரையம்பதி மெதடிஸ்த திருச்சபை அருட்பணி வினோத் அவர்களும் , சிறப்பு அதிதியாக டிசாந்தினி நடராசா (Education., Ennovation, leadership and social service (USA) - coordinator)ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

முன்பள்ளி ஆசிரியர் DINIYA SHIRAN தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் 15 முன்பள்ளி சிறார்கள் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார்கள்

மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை BRIGHT-BEGINING- முன்பள்ளி பாடசாலையின் 40 சிறார்களும் , 05 ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டார்கள் .

நிகழ்வில் சிறார்களின் கண்கவர் குழு நடனங்கள் இடம்பெற்றதோடு, சிறார்கள் ஒன்று சேர்ந்து நத்தார் பாப்பா நடனத்தை வழங்கி மகிழ்வித்தனர் .

விழா முடிவில் நத்தார் தாத்தாவினால் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப் பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 இந்நிகழ்விற்கு சிறார்களின் பெற்றோர்கள் பிரதேச வாழ் பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.