(ஆர்.நிரோசன்)
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று(30) வியாழக்கிழமை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட முதல் தர பாடசாலைகளில் ஒன்றான மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையிலும் இந் நிகழ்வானது அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி
தலைமையில் இன்று இடம் பெற்றது.
முதல் கட்ட நிகழ்வாக தேத்தாதீவு அருட்தந்தை ஜூட் ஷெரின் அவர்களுடைய நற்சிந்தனை இடம்பெற்றதுடன்
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் ஆலோசகர் ஆன மருத்துவர் வி.தேவகாந்தன், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி ஆலோசகர் ஜமுனா இந்திரகுமார் மற்றும் சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவர் செயலாளர், அபிவிருத்தி சபையின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் போது சுமார் 100 மாணவர்கள் தரம் 02ம் மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு மலர் செண்டுகள் கொடுத்து பாடசாலை மாணவர்களின்
இசையுடன் நடனங்கள், பாடல்கள் என்பவற்றோடு வரவேற்கப்பட்டனர்.