மட்டக்களப்பு  தேற்றாத்தீவு வடபத்திரகாளி காளி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு -02.02.2025.

 

 


 




மட்டக்களப்பு  தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாளிற்கும் பரிவார ஆலயங்களாகிய பிள்ளையார் நாகதம்பிரான் ,வீரபத்திரர் ,பைரவர் ஆகிய  ஆலயங்களுக்கும் புனராவர்த்தன அஸ்டபந்தன  நவகுண்டபக்ஷ  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02 .02.2025 திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 30.01.2025 திகதி காலை கும்பாபிஷேக கிரியாரம்பத்துடன் பூசைகள் இடம் பெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து 31.01.2025 திகதி  மற்று 01.02.2025 திகதி  எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு  பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் 02.02.2025 திகதி காலை 8.21மணி முதல் 10.33 மணி வரையுள்ள சுபமுகுர்த்த வேளையில் மகா குப்பாபிஷேகம் இடம்பெற்றும்.
கிரியா காலத்தில் பிரதிஸ்டா பிரதம குருவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. க.வடிவேல் குருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது கும்பாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று எதிர்வரும் 13.02.2025 திகதி சங்காபிஷேகம் இடம் பெறவுள்ளது.