மட்டக்களப்பு ஆரையம்பதி-03 வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமான பிள்ளையார் கதை விரத்தை முன்னிட்டு இடம்பெற்ற 21 ஆம் நாளாகிய இன்று காலை சங்காபிஷேக நிகழ்வு மிகச் சிறப்பாக 05.12.2025 இடம் பெற்றது.
காலை 8:00 மணி தொடக்கம் மதியம் 11 மணி வரை சங்காபிஷேகம் இடம்பெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஹரிஹர சர்மா உட்பட உதவி குருமார்கள் சகிதம் பூஜைகள் இடம் பெற்றன. இதனைத்தொடர்ந்து பிற்பகல் 5.00 மணியிலிருந்து பெருங்கதை பூசை இடம்பெற உள்ளது , இன்று இரவு சிறப்பு மிகு திருவிழா இரவு 7:00 மணிக்கும் இடம் பெரும் .
மறுநாள் காலை 6. 1.2025 காலை தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவு பெரும்