திபெத்​தில்​ ஏற்​பட்​ட நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக 126 பேர்​ உ​யிரிழந்​துள்​ளனர்​.

 



திபெத்​தில்​ ஏற்​பட்​ட   நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக 126 பேர்​ உ​யிரிழந்​துள்​ளனர்​. மேலும்​ 200-க்​கும்​ மேற்​பட்​டோர்​ ​காயமடைந்​தனர்​. இந்​த நிலநடுக்​கம்​ டெல்​லி, பிஹார்​ ​மாநிலங்​களி​லும்​ உணரப்​பட்​டது.

​திபெத்​தில்​, நேபாள எல்​லைப்​ பகு​தி​யையொட்​டி நேற்​று ​காலை 6.35 மணியள​வில்​ சக்​தி வாய்​ந்​த நிலநடுக்​கம்​ ஏற்​பட்​டது. திபெத்​தில்​ உள்​ள மலைப்​பகு​தி​யில்​ சு​மார்​ 10 கிலோமீட்​டர்​ ஆழத்​தில்​ இந்​த நிலநடுக்​கத்​தின்​ மையப்​புள்ளி இருந்​துள்ளது.

இதனால்​ ​திபெத்​, நேபாள நாடுகள்​ நிலநடுக்​கத்​தில்​ பாதிக்கப்பட்டுள்ளது. இந்​த நிலநடுக்​கம்​ ரிக்​டரில்​ 7.1 ஆக ப​திவானது என அமெரிக்​க பு​வி​யியல்​ ஆய்வு மையம்​ தெரி​வித்​துள்ளது. இந்​த நிலநடுக்​கம்​ ​திபெத்​தின்​ ஜிசாங்​க்​ பகு​தியை மைய​மாகக்​ ​கொண்​டு ஏற்​பட்​ட​தால்​ அப்​பகு​தி​யில்​ கடுமை​யான சேதம்​ ஏற்​பட்​டுள்ளது.