மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று காலை  விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயம் .

 

 


 

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று (20) காலை  விபத்துக்குள்ளாகியுள்ளது.

சேருநுவர-கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது