மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மானிய கொடுப்பனவு 1500 மில்லியன் ரூபா வழங்கி வைக்கப் பட்டுள்ளது - மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் K. ஜெகநாத்


வரதன்

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள  வயல் காணிகளை  காப்புறுதி சபையினூடாக எதிர் காலத்தில் எடுக்கப்பட உள்ளது , வெள்ளத்தை தடுப்பது சம்பந்தமான திட்டங்களை எமது திணைக்களத்தின் ஊடாக எடுக்க முடியாத உள்ள காரணத்தினால் அரசாங்கத்தினால் இந்த நீர் சேமித்து குளங்களை அமைத்து வடிகான்கள் மூலம் இந்த வெள்ள பாதிப்புக்களில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும்

கடந்த வருடம் பெரும்போகத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் ஏக்கரில் வயல் செய்ககை  மேற்கொள்ளப்பட்டிருந்தது,  அதிலே மானிய கொடுப்பனவு மூலம் 1500 மில்லியன் ரூபா நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு வைப்பீடு செய்யப்பட்டுள்ளது


மாவட்டத்திலேயே 99 விதமான விவசாயிகளுக்கு மானிய கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

என மட்டக்களப்பு மாவட்ட  கமநல அபிவிருத்தி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் K. ஜெகநாத் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்.