இம்முறை சிகரெட் வரி அதிகரிப்பை சிகரெட் தொழில்துறையினர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.
அதிகளவில் விற்பனை செய்யப்படும் சிகரெட் வகையின் வரி 4.51 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் அதன் சந்தை விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
முறையான வரிவிதிப்பு முறைமையை ஏற்படுத்தாமல் இந்த வரி அதிகரிப்பினால் சிகரெட் தொழில்துறைக்கு 7,000 மில்லியன் ரூபா மேலதிக இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும் ADIC அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புகையிலை நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதால்,அவர்களின் விளம்பரம் மற்றும் பல்வேறு தலையீடுகளுக்கு பெரும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றும், புகையிலை நிறுவனத்தின் பாதிப்பால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் செயல் இயக்குநர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.
மதுபானத்தின் மீதான வரி வருமானம் மதுவினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் மதுபானத்தின் பொருளாதார மற்றும் சுகாதாரச் செலவு 237 பில்லியன் ரூபாவாக இருந்தது என்றும், மதுபான வரி வருமானம் அந்த வருடத்தில் 165.2 பில்லியன் ரூபாவாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
மதுபானத்தின் மீதான வரி வருமானம் மதுவினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் தொற்றா நோய் மரணங்கள் எண்பது வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இலங்கையில் மது பாவனையினால் வருடம் தோறும் 15,000 பேரும் புகைப்பழக்கத்தினால் 20,000 பேரும் இறப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில் மது வரியை 20 சதவீதத்தால் உயர்த்தியதன் மூலம், மது அருந்துதல் (நிகர ஆல்கஹால்) 8.3 மில்லியன் லீற்றர் குறைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் மது வரி வருமானம் 11.6 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக சேரம் கூறினார்.
மேலும், சிகரெட் மூலம் அரசாங்கத்தின் வற் வரி வருமானம் 7.7 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.