படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 24.01.2025 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் மதியம் 3.00 மணி அளவில் அனுஷ்டிக்கப்பட்டது
மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து மட்டு ஊடக மையத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் ஒழுங்குபடுத்துதலில் இந்நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த அமரர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் திருவுருவப் படத்திற்கு மட்டு ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்கள், மூத்த ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா அரியனேந்திரன் அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் மட்டு மாவட்ட ஊடகவியலாளர்கள் இணைந்து மலர்மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது அண்மையில் காலமான சிரேஸ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.