வழிதேடும், சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் ஆங்கிலப் புதுவருட விழா -2025


 

















 

 






 


 





























































செய்தி ஆசிரியர்



"வழிதேடும், சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் ஆங்கிலப் புதுவரு விழா 2024.01.01 புதன் கிழமை இடம்பெற்றது.

உதவும் கரங்கள் இல்லத்தலைவர் திரு . .ஜெயராஜா தலைமையில் இடம் பெற்ற புதுவரு விழாவிற்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் .முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்

மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி உப பீடாதிபதி திருமதி . .சுந்தரராஜன் மற்றும் காயான்குடா விவசாய போதனாசிரியர் கா .லிங்கேஸ்வரன் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர்.

மேலும் மதுரா ஜூவல்லரி உரிமையாளர் .தியாகராஜா, கிரி கொமினிகேசன் உரிமையாளர் .கிரிதரராஜா மற்றும் ஓய்வு நிலை அதிபர் சைவப்புலவர் வே .மகேசரெத்தினம் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர் .

செங்கதிர் ஆசிரியர் செங்கதிரோன் .கோபால கிருஷ்ணன் மற்றும் மகுடம் ஆசிரியர் மகுடம் வி .மைக்கல் கொலின் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக பங்கேற்று இருந்தனர் .

அதிதிகளை வரவேற்றல் , மங்கள விளக்கேற்றல் , இறை வணக்கம் ,போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து உதவும் கரங்கள் இல்ல மாணவர்களின் வரவேற்பு நடனம் மிக சிறப்பாக இடம் பெற்றது .

'அதனைத்தொடர்ந்து திரு ராஜ்மோகன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது .

உதவும் கரங்கள் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு .ஜெயராஜா அவர்கள் தலைமையுரை வழங்கினார் .

தொடர்ந்து பிரதம அதிதி உரை மற்றும் கௌரவ , அழைப்பு அதிதிகள் உரை இடம் பெற்றது

சுவாமி விபுலானந்தர் பாலர் பாடசாலை சிறார்களின் கலை நிகழ்வுகள் ,உதவும் கரங்கள் இல்ல மாணவர்களின் பாரம்பரிய கலாசார நடனங்கள் , ஆங்கில , சிங்கள பேச்சுகள் , பாடல்கள் என வெகு சிறப்பாக இடம் பெற்றன .

இதன் போது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், , பரிசுப்பொருட்கள், புத்தகப்பை போன்றன வழங்கப்பட்டன மற்றும் அதிதிகளுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிதிகளுக்கும் உதவும் கரங்கள் இல்லத்தலைவரினால் புது வருட கைவிசேடம் வழங்கப்பட்டது .

உதவும் கரங்கள் பொருளாளர் DR.K. கிரி சுதன் அவர்கள் நன்றியுரை வழங்கியதோடு 2025புதுவரு விழா இனிதே நிறைவுற்றது .