மட்டக்களப்பில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் இன்று செவ்வாய்கிழமை 2025.01.14 விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.























செய்தி ஆசிரியர்

 

 

 

 

அண்மைய நாட்களில் மட்டக்களப்பில் பெய்த கடும்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்திருந்தது. சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தைப்பொங்கலை "பொங்கலோ பொங்கல்" சொல்லி புதுப்பானையில் பொங்கி உறவுகளுக்குக் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்

இந்நிலையில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம், அரசடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயம், மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் , இல்லங்கள் என தமிழர்களின் இடமெங்கும் பொங்கல் பொங்கி சூரியனுக்கு வழிபாடு செய்து உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர்

அத்தோடு தமிழர் பிரதேசங்களிலுள்ள பொது அமைப்புக்களும் உழவர் திருநாளைப் பொங்கி கொண்டாடியதை கண்ணாரக் காண முடிந்தது.