மாற்றத்தை ஆரம்பித்த மட்டக்களப்பு இந்துக்கல்லூரி -2025.01.17

 

 


 

 


 

 


 


 

































 






அதிமேதகு ஜனாதிபதியினால் 'அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்" எனும் பிரகடனத்துக்கு அமைய செயற்படுத்தப்படும் Clean Sri Lanka என்ற பாரிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியான நிலைபேறான சுற்றுச்சூழலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Pure BHC : ஒரு சுத்தமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஒரு படி! செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2025.01.17) மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில், Pure BHC செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை வளாகம், பாடசாலையை அண்டியுள்ள பிரதேசங்கள் என்பன கல்லூரியின் சுகாதாரக் கழகம் (Hindu Health Care Club), சுற்றாடல் படையணி, சாரணர் படையணி, அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் ஆகியோரினால் சுத்தம் செய்யப்பட்டன.

Clean Sri Lanka, Pure BHC இனூடாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆரம்பித்த இந்த மாபெரும் மாற்றம், பாடசாலை மட்டத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் நிச்சயம் சுத்தமான இலங்கையை உருவாக்கமுடியும்.


Pure BHC இனுடைய நோக்கம்:

மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில் பொறுப்புணர்வை வளர்க்கும் வழியில், ஒரு புதிய சுத்தமான மற்றும் நிலைத்த சுற்றுச்சூழலை உருவாக்குவதாகும். கல்லூரியில் கற்கும் 1200 மாணவர்களினூடாக 1200 குடும்பங்களுக்கும், அக் குடும்பங்களினூடாக அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் நிலைபேறான ஆரோக்கியமான சுகாதாரமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதாகும்.


Pure BHC இன் எதிர்கால திட்டங்கள் :

1. சுத்தம் மற்றும் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து ஏற்றுக்கொள்ளும் பிரச்சாரங்கள்

2. பாடசாலை வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் இயக்கங்கள்

3. சூழல் சீர்திருத்தம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் குறித்து செயற்பாட்டுகள்

4. மரங்களை நடுவோம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பற்றிய முயற்சிகள்

5. சமூகத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் மற்றும் பரிந்துரைகள்

6. பொலித்தீன் பாவனை குறைந்த பாடசாலையை (Polythene Less BHC) உருவாக்கி அதனூடாக எதிர்காலத்தில் பொலித்தீன் பாவனை அற்ற இந்துக் கல்லூரியினை (Polythene Free BHC)உருவாக்கல்.