கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலய புணருத்தாரன பஞ்சகுண்ட பக்ஷ அஷ்ட மகா கும்பாபிஷேக நிகழ்வு தைத்திங்கள் ஆறாம் நாள் 2025.01.19 முற்பகல் 9.58 மணி தொடக்கம் 11:37 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மிகச் சிறப்பாக முறையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேஷ லோகநாத குருக்கள் உட்பட உதவி குருமார்கள் சகிதம் பூஜைகள் இடம் பெற்றன.
இதனைத்தொடர்ந்து ஆரையம்பதி ராமகிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவிகளின் சிவதாண்டவ நாட்டியமும் தசமங்கல தர்சனம் எஜமான் அபிஷேகம் ஆச்சார்ய சம்பாவனை, குரு ஆசிர்வாதம், விபூதி பிரசாதம் வழங்கும் நிகழ்வும் பெரும் திரளான பக்த அடியார்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
இப் பெருவிழாவினைக் காண மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலாபக்கமும் இருந்து பல நூற்றுக்கணகான அடியவர்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.