வரதன்
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் வி .மைக்கல் கொலினின் ''அன்பின் முத்தங்கள்" கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தில் சங்கத்தின் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டு கவிதை நூலின் சிறப்பு பிரதிகளையும் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் அழைத்துவரப்பட்டதன் பின்பு மங்கள விளக்கேற்றல் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து இடம்பெற்றதன் பின்பு மௌன இறைவணக்கத்தை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகிது.
நூல் வெளியீட்டின் வரவேற்புரையை ரா .பிரதீஷ் காந்த் தமிழ் சங்கத்தின் துணைச் செயலாளரால் நிகழ்த்தப்பட்டது நூலின் வெளியீட்டுறையை சட்டத்தரணி மு.கணேசராஜா சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர்களால் நிகழ்த்தி வைக்கப்பட்டது நூலின் நயவுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் மோகனதாஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது
அதனைத் தொடர்ந்து சிறப்பு அதிதிகளின் உரைகள் இடம் பெற்றது
பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வின் தொடர் நிகழ்வாக இடம் பெற்ற இந்த கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வுக்கு
சிறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனக சிங்கம் மற்றும்
கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர திருமதி கலாமதி பத்மராஜா கலந்து கொண்டனர்
மேலும் விசேட விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திரு கு.பிரணவன்
அழைப்பு விருந்தினராக திருமலை நவம் எழுத்தாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
நூலின் முதன்மை பிரதிகளை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் பொருளாளர் க. தியாகராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கும் நூலாசிரியர் ஆனால் இந்த சிறப்பு கவிதை நூல் வெளியீட்டு புத்தகங்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் விசேட அதிதியாக நிகழ்வில் கலந்து கொண்டார்