தீப்பந்தம் ஏந்தியவாறு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ஊடகவியலாளர்கள்-2025.01.30


































ஊடவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர், மதத் தலைவர்கள் ஒன்றினைந்து தீப்பந்தங்களை ஏந்தியவாறு மட்டக்களப்பில் இன்று (30) திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை ஆகியவற்றினை குறிக்கும் வகையில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் வகையில் மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள தீப்பந்த போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகில் நடைபெற்றுள்ளது.

மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்
ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  முதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்  நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தியவாறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் நீதி கோரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.