மட்டக்களப்பு அரசடி கேம்பிரிட்ஜ் முன்பள்ளியின் கல்வி கண்காட்சி- 2025

 


  


 



































செய்தி ஆசிரியர்

 

 

 

 

 

மட்டக்களப்பு அரசடியில் அமையப்பெற்ற கேம் பிரிஜ் முன்பள்ளியின் கல்வி கண்காட்சி திங்கட்கிழமை 2025.01.13 மாலை நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கேம்பிரிட்ஜ் முன் பள்ளி பாடசாலை பணிப்பாளர்களான திரு , திருமதி சாமுவேல் ஜெயா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . மேலும் 60 முன்பள்ளி சிறார்களும் 0 3 ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .

பிள்ளைகளின் ஆக்கத்திறனை ஊக்குவிக்கவும் அவர்களது ஆளுமையை மேம்படுத்தவும் அத்துடன் பொது அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் இக்கண்காட்சி நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டது.

கண்காட்சியில் பங்கு பற்றிய மாணவர்கள் அனைவருக்கும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .

இந்நிகழ்வில் சுமார் 60 சிறார்களும் பங்கு பற்றி அவர்களது கைவினைப் பொருட்களையும் , சித்திரங்களையும் காட்சிப்படுத்தி இருந்தனர், அத்துடன் பெரும்பாலா பெற்றோர்களும் பிள்ளைகளுமாக குடும்ப சகிதம் வருகை தந்து இக்கண்காட்சியை கண்டு களித்தமை குறிப்பிடத்தக்கது.