ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான
முகாமானது கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பான முறையில் நடந்தேறியது.
ஆரையூர் விளையாட்டு கழகமானது 2025 ம் ஆண்டின் முதலாவது நிகள்வாக மேற்படி இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்சியாக
இரண்டாவது வருடமாகவும் இடம்பெற்ற மேற்படி நிகள்வில் கழக உறுப்பினர்கள்
மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இரத்தான முகாமானது சிறப்பான முறையில்
இடம்பெற்றதாகவும், விடாது பெய்த கன மழைக்கு மத்தியிலும் சிரமங்களை
பொருட்படுத்தாது பொதுமக்கள் ஆர்வத்துடன் குருதிக்கொடை செய்வதில் கலந்து
கொண்டதாகவும் கழகத்தின் செயலாளர் த.அஜேனிதன் தெரிவித்ததுடன்,
இதில்
கலந்து கொண்டு தங்களுடைய மேலான குருதியினை வழங்கியவர்கள்,இந்த இரத்ததான
முகாம் சிறப்பாக நடைபெற பலவகையிலும் உதவி புரிந்த அனைத்து நல்
உள்ளங்களுக்கும் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்….