மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பொங்கல் விழா -2025

 






























  செய்தி ஆசிரியர்

 

 

 

மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில்  பொங்கல் விழா பிரதேச செயலக முற்றத்தில் இடம் பெற்றது. 

உதவி பிரதேச செயலாளர்களான  திருமதி லக்ஷனியாக பிரசாந்தன் , மற்றும்

சுபா சதாகரன் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக  கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி தலைமை முகாமையாளர் மற்றும் பல உத்தியோகத்தர்களும்  விழாவில் கலந்து கொண்டனர் .


இந்நிகழ்வில்  பிரதேச செயலகத்தில் செயல்படும்  ஒன்பது      கிளைக்குமென தனித்தனி பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு அக்கிளைகளில் பனி புரியும் உத்தியோகத்தவர்களால் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டமை    குறிப்பிடத்தக்கது.
பொங்கல் விழாவின் போது நடனம் , பாடல் என பல்வேறு நிகழ்வுகளும் கலாச்சார பிரிவினரால்  நடத்தப்பட்டன .
செயலகத்தில் பனி புரியும் உத்தியோகத்தர்கள் உட்பல பொது மக்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .