மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்ல புது முக மாணவர்களின் வரவேற்பும் ,முதலாம் அணி மாணவர்களின் தாலாட்டு நிகழ்வும் -2025

 













































செய்தி ஆசிரியர்

 

 

மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் தலைவர் .ஜெயராஜா தலைமையில் மேற்படி நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது .

மட்டக்களப்பு உள்நாட்டு திணைக்கள பிரதி ஆணையாளர் திரு . .குணராஜா ,மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு . .ஹரிஹரராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர் .

மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி பதிவாளர் திருமதி .சு .சுகுமார் , மட்டக்களப்பு மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு . .மதிவண்ணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டதோடு ,

கிராம உத்தியோகத்தர் திருமதி .சுகந்தராஜ் , செங்கலடி ஏறாவூர் பற்று முன்பிள்ளைக்கல்வி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி L .நபீலா ஏறாவூர் பற்று சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் திரு . .ரமணன் , செங்கலடி ஏறாவூர் பற்று கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .சு . முகுந்தன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்கேற்றனர் .

லக்சனா டிஜிட்டல் பிரின்டிங் உரிமையாளர் திரு . .மதியழகன் , தன்னாமுனை ஜோசப் கல்லூரி ஓய்வு நிலை அதிபர் திரு . .பற்றிக் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர் .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல் , மங்கள விளக்கேற்றல் , இறை வணக்கம் வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன .

ஏறாவூர் பற்று கோட்டக்கல்வி பணிப்பாளரும் உதவும் கரங்கள் அமைப்பின் உப தலைவருமான திரு . .ராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார் .

உதவும் கரங்களின் தலைவரும் , சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு . .ஜெயராஜா தலைமையுரையாற்றினார் .

அதனை தொடந்து புது முக மாணவர்களின் வரவேற்பு , பாடசாலை சிறார்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாராட்டு நிகழ்வு என்பன இடம் பெற்றன

அதிதிகள் உரை உரையாற்றியதை தொடர்ந்து உதவும் கரங்கள் செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி .சாரதி ஜெயதேவன் நன்றியுரை வழங்கினார்

நிகழ்வுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் , சிறார்கள் ,ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்